Home One Line P1 கொவிட்19: புதிதாக 563 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

கொவிட்19: புதிதாக 563 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

457
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 12) கடந்த 24 மணி நேரத்தில் 563 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 16,220 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கொவிட்19 தொற்று தொடங்கியதிலிருந்து கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி 691 சம்பவங்கள் பதிவாகின. மலேசிய வரலாற்றில் இதுவே மிக அதிகமான எண்ணிக்கையாக அப்போது அறிவிக்கப்பட்டது.

109 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 11,022- ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் பக்கத்தின் வழி நேரலையாக ஒளிபரப்பான இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மொத்தம் 5,039 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 98 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 29 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று புதிதாக 2 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மரணங்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

சபாவில் அதிகமாக 291 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கெடாவில் 10 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 36 சம்பவங்களும், கோலாலம்பூரில் 27 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

பினாங்கில் முன்னெப்போதும் போல் அல்லாமல் இன்று 141 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஆனால், இவை அனைத்தும் சிறைச்சாலை தொற்றுகள் என்று நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

நேற்று, சபாவில் அதிகமாக 488 தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதுவரையிலும், அங்கு பதிவுச் செய்யப்படாத எண்ணிக்கை அதுவாகும்.