Home One Line P1 கொவிட்19: 691 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

கொவிட்19: 691 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 691 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கடந்த வாரங்களில் மூன்று இலக்கு எண் சம்பவங்களைப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது, பாதிப்பு எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ளது. இதனால் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொற்று எண்ணிக்கை 13,504-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று பதிவு செய்யப்பட்ட 691 சம்பவங்களில், 688 உள்ளூர் தொற்றாகும். கெடாவில் 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சபாவில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூரில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று 38 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 87 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 10,427-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நான்கு பேர் மரணமுற்ற நிலையில், மரணம் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.

2,936 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 31 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்மருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.

சபாவில் தொடங்கிய இந்த தொற்று பாதிப்பு,தற்போது நாடு முழுவதிலும் பரவியதாக மக்கள், ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசாங்கத்தின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.

இதனிடையே, நாளை புதன்கிழமை தொடங்கி சபாவில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.

அவசரநிலை, இறப்புகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒப்புதல் தேவைப்படும் சில தரப்புகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“ஒப்புதல் பெற்றவர்கள் தங்கள் இலக்கை அடைந்தவுடன் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 432 சம்பவங்கள் பதிவாகி, கடந்த 6 மாதங்களில் இல்லாத தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.