கோலாலம்பூர்: சபாவிலிருந்து, தீபகற்பம், சரவாக், லாபுவானுக்குச் செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இந்த நடைமுறை நாளை புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 20 வரை அமலில் இருக்கும்.
அவசரநிலை, இறப்புகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒப்புதல் தேவைப்படும் சில தரப்புகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“ஒப்புதல் பெற்றவர்கள் தங்கள் இலக்கை அடைந்தவுடன் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி நாட்டில் 432 சம்பவங்கள் பதிவாகி, கடந்த 6 மாதங்களில் இல்லாத தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர்.