Home One Line P1 கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்

கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தற்போதைய கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரம் மற்றும் நாட்டின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

அதே நேரத்தில், கல்வி மற்றும் சமூகத் துறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறு இல்லாமல் தொடர அனுமதிக்கிறது. இருப்பினும், கல்வி மற்றும் சமூகத் துறைகளில் கட்டுப்பாடு இருக்கும்” என்று அவர் இன்று காலை தனது முகநூலில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தும் முயற்சி ஒரு சவாலான பணி என்றும் அவர் விவரித்தார்.

“கொவிட்19 இன் விளைவுகளிலிருந்து ஆரோக்கியத்திற்கும், பொருளாதாரத்திற்கும் இடையில் பாதுகாத்தல் மற்றும் சமநிலைப்படுத்துவது ஒரு சவால்.

“சமநிலையை இழப்பது என்பது உயிர் இழப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு” என்று அவர் கூறினார்.

அக்டோபர் 14 நள்ளிரவு 12.01 நள்ளிரவு முதல் அக்டோபர் 27 வரை நடைமுறைக்கு வரும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரை உள்ளடக்கியுள்ளது.