Home One Line P1 நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: 2 மில்லியன் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: 2 மில்லியன் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபா மற்றும் தீபகற்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாட்டில் மொத்தம் 2,797 பள்ளிகள் மூடப்படுகின்றன.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 26 வரை சபாவில் தொடங்குகிறது. சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும்.

சபாவில் 511,349 மாணவர்களுடன் மொத்தம் 1,336 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீபகற்பத்தில் 1.2 மில்லியன் மாணவர்களைக் கொண்ட 1,461 பள்ளிகள் மூடப்படுவதாகவும் அமைச்சு அறிவித்தது.

#TamilSchoolmychoice

தற்காலிகமாக அனைத்து பாலர் பள்ளி, ஆரம்ப, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

தொழிற்கல்வி மற்றும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் உட்பட விடுதி கொண்ட அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.