Home One Line P1 செல்லியல் காணொலி : அன்வாருக்கு 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

செல்லியல் காணொலி : அன்வாருக்கு 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

461
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக அமானா கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் காலிட் சமாட் தெரிவித்துள்ளார்.

காலிட் சமாட் ஷா ஆலாம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமாவார்.

#TamilSchoolmychoice

“அமானா, ஜசெக கட்சிகளைத் தவிர்த்து, அன்வார், சாஹிட் ஹமிடியிடமிருந்து ஓர் ஆதரவுக் கடிதத்தையும் கொண்டு வந்தார். அதன்படி 30 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது” என காலிட் சமாட் கூறியிருக்கிறார்.

இதுதவிர சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆதரவுக் கடிதங்களையும் அன்வார் சமர்ப்பித்தார் என நினைக்கிறேன் என்றும் காலிட் சமாட் தெரிவித்தார்.

அன்வாருக்கான மற்ற கட்சிகளின் ஆதரவின்படி பிகேஆர் சார்பில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் 42 பேர், அமானாவிலிருந்து 11 பேர் அன்வாரை அடுத்த பிரதமராக ஆதரிக்கிறார்கள்.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அன்வாருக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக காலிட் சமாட் மேலும் கூறினார்.

இதைத் தொடர்ந்து மாமன்னர் அந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களோடும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் உறுதிப்படுத்திக் கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் காலிட் கூறினார்.

நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்த பின்னரும் மொகிதின் யாசின், துன் மகாதீர் போன்று பதவி விலகாமல் நீடிப்பதால் நிலைமை சிக்கலாகியுள்ளது எனத் தெரிவித்த காலிட், தற்போது அமுல்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவினால் ஆட்சி மாற்றம் தாமதமாவதாகவும் குறிப்பிட்டார்.