Home One Line P1 தேசிய கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து அம்னோ விவாதிக்கத் தொடங்கியுள்ளது

தேசிய கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து அம்னோ விவாதிக்கத் தொடங்கியுள்ளது

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செவ்வாயன்று தேசிய கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க கட்சியின் அரசியல் பிரிவு எடுத்த முடிவு குறித்து அம்னோ ஏற்கனவே விவாதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விஷயம் எந்த நேரத்திலும் நடைபெறும் என்றும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் விவாதத்திற்குரிய விஷயமாக இது இருக்கும் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா நம்புகிறார்.

“அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடந்தால், நிச்சயமாக இந்த விடயம் விவாதிக்கப்படும்.

#TamilSchoolmychoice

“இந்த விஷயம் (அம்னோ அரசியல் பிரிவின் முடிவு) விவாதிக்கப்படுவதை நான் கவனித்தேன். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் வாட்சாப் குழுக்களில் உள்ளனர். கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை, “என்று அவர் கூறினார்.

செவ்வாயன்று, அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், தேசிய கூட்டணியை ஆதரிப்பதில் இருந்து விலகுவது குறித்து அம்னோ பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

இருப்பினும், அம்னோ அரசியல் பிரிவின் இந்த நிலைப்பாடு இறுதியானது அல்ல, ஏனெனில் இந்த விவகாரம் இன்னும் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தேசிய முன்னணி நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அனுவார், இது குறித்து இதுவரை எந்த விவாதமும் செய்யப்படவில்லை என்று கூறினார்.

“தேசிய முன்னணி நிலையில் எந்தவொரு கூட்டத்தையும் நடத்தவில்லை. தேசிய முன்னணி எப்போது அக்கூட்டத்தை நடத்தும் என்ற எதிர்பார்ப்பு இல்லை” என்று அவர் சுருக்கமாக கூறினார்.