கோலாலம்பூர்: மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின், அனைத்து மக்களையும், குறிப்பாக அரசியல்வாதிகளை நாட்டில் மேலும் ஒரு நிச்சயமற்ற அரசியல் தன்மையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
கொவிட் -19 தொற்றுநோயின் விளிம்பில், மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் கடினமான சூழலையும் எதிர்கொண்டுள்ளனர்.
அல்- சுல்தான் அப்துல்லா, 14 – வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் தொடக்க விழாவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனையை வழங்கும் போது மீண்டும் இதனை கூறினார். அரசியலில் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமென்று ஓர் ஊடக அறிக்கையின் மூலம், அரண்மனை காப்பாளர் அகமட் பாடில் சம்சுடின் கூறினார்.
“அல் சுல்தான் அப்துல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் குறைகளை புரிந்துகொண்டு அவற்றை வடிவமைக்கவும், மக்களின் நல்வாழ்வை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
“அரசியல்வாதிகள் கருத்து வேறுபாடுகளை விரோதத்துடன் முடிவுக்குக் கொண்டுவரக்கூடாது. மாறாக கூட்டரசு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட செயல்முறைகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்,” என்று அவர் கூறினார்.