Home One Line P2 அமெரிக்கா: 14 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்

அமெரிக்கா: 14 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்

411
0
SHARE
Ad

வாஷிங்டன்: நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் 14 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் என்று அமெரிக்க தேர்தல் திட்டத் தரவு தெரிவித்துள்ளது.

“இங்கு 3 காரணிகள் உள்ளன. ஒன்று, நாடு அதன் சட்டங்களை தளர்த்தியுள்ளது. ஏற்கனவே நிகழ்ந்த மாற்றங்கள் மூலமாகவோ அல்லது தொற்றுநோய் காரணமாக தொடர்ந்து ஏற்படும் அவசரநிலைகள் மூலமாகவோ இருக்கலாம். பலர் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதையும், கூடல் இடைவெளியை பராமரிக்க ஆரம்பத்தில் வாக்களிப்பதையும் நாங்கள் பார்க்கிறோம், ” என்று தேர்தல் திட்டத்தை நடத்தும் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் மெக்டொனால்ட் கூறினார்.

“மற்றொரு பெரிய காரணி, என்ன நடக்கிறது என்பது பலர் வாக்களிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் அதை விரைந்து செய்கிறார்கள்” என்று பேராசிரியர் மேலும் கூறினார்.