Home One Line P1 கொவிட்19: டி614ஜி பிறழ்வு தீபகற்பத்தில் பரவி விட்டது!

கொவிட்19: டி614ஜி பிறழ்வு தீபகற்பத்தில் பரவி விட்டது!

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டி614ஜி எனப்படும் கொவிட்19 பிறழ்வு தொற்று பெந்தேங் லாஹாட் டாத்து தொற்றுக் குழு சம்பவங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சபாவிலிருந்து திரும்பி வந்தவர்களில் 600- க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், டி614ஜி பிறழ்வு தீபகற்பத்தில் பரவியுள்ளது என்று சந்தேகிக்கபப்டுவதாக அவர் தெரிவித்தார்.

பெந்தேங் லாஹாட் டாத்து தொற்றுக் குழுவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட 20 தொற்றுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.ஆர்) சோதனைகளை நடத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

“டி614ஜி பிறழ்வு ஏற்கனவே கண்டறியப்பட்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார். இது இந்தோனேசியா அல்லது பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

“இப்போது உறுதியாக இருப்பது என்னவென்றால், சபாவிலிருந்து திரும்பி வந்த 604 நபர்கள் சம்பந்தப்பட்ட 23 புதிய தொற்றுக் குழுக்கள் ஏற்கனவே கொவிட்-19 தொற்றைக் கொண்டுள்ளனர்

“பெரும்பாலும் அவர்கள் டி614ஜி பிறழ்வு நோய்த்தொற்றை சபாவிற்கு வெளியே கொண்டு சென்றுள்ளனர்” என்று நூர் ஹிஷாம் விளக்கினார்.

இது தவிர, இந்த முறை டி614ஜி பிறழ்வின் வகை தாவாவ், சுங்கை, புக்கிட் டிராம் மற்றும் சிவகங்கா தொற்றுக் குழுக்களிலிருந்து வேறுபட்டது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

செப்டம்பர் 1-ஆம் தேதி கொவிட்-19 தொற்றுக்கு ஆளான இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினர் பெந்தேங் லாஹாட் டாத்து தொற்றுக் குழுவைத் தூண்டினர்.

இன்றுவரையிலும், மொத்தம் 1,018 சம்பவங்களை இத்தொற்றுக்குழு பதிவு செய்துள்ளது. அவற்றில் 230 சம்பவங்கள் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

செப்டம்பர் 21 முதல் 25 வரை, இரண்டு வாரங்களுக்கு நீடித்த சபா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, நாடு தொற்று நோய் சம்பவங்களின் கூர்மையான அதிகரிப்பைப் பதிவு செய்தது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 589 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 18,129 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.