Home One Line P2 பிக்பாஸ் 4 : காப்பாற்றப்பட்ட 3 பேர் – ரம்யா, ஆஜீத், ஷிவானி

பிக்பாஸ் 4 : காப்பாற்றப்பட்ட 3 பேர் – ரம்யா, ஆஜீத், ஷிவானி

900
0
SHARE
Ad

சென்னை : ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி, நான்காவது ஆண்டாக நடத்தப்பட்டு, கோடிக்கணக்கான தமிழர்களால் உலகம் எங்கும் தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த முறையும் கமல்ஹாசனே மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.

முதல் வாரத்துக்கான நிகழ்ச்சி முடிவடைந்து போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. இரண்டாவது வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே புதிதாக நுழைந்திருப்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான அர்ச்சனா.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டின் ஸீ தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது சுவாரசியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டாவது வாரத்தில் இதுவரையில் 7 பிரபலங்கள் வெளியேற்றப்பட முன்மொழிந்திருக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஷிவானி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேபிரியல்லா, ஆஜீத் ஆகியோரே அந்த எழுவராவர்.

நேற்று சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வழக்கம்போல் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

அப்போது தொலைக்காட்சி இரசிகர்களால் இந்த வாரம் காப்பாற்றப்பட்டவர்கள் யார் என ஒவ்வொருவராக கமல் அறிவித்தார். அந்த அறிவிப்பை பங்கேற்பாளர் அர்ச்சனாவைக் கொண்டு வெளியிட்டார்.

அதன்படி முதலில் காப்பாற்றப்பட்டவர் ஆஜீத். இரண்டாவதாக ஷிவானியும் மூன்றாவதாக ரம்யா பாண்டியனும் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள நால்வர் சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேபிரியல்லா, ரேகா ஆகியோராவர். இவர்களில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதன் முதலாக வெளியேற்றப்படப் போகிறவர் யார் என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியைத் தொகுக்க வரும்போது கமல்ஹாசன் அறிவிப்பார்.

இந்த முறை பலதரப்பட்ட வாழ்க்கைப் பின்னணியையும், தொழில் பின்னணியையும் கொண்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது அர்ச்சனாவும் இணைந்திருப்பதால் மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 17 ஆக இருக்கிறது.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்ட மூவர் பின்வருமாறு: