Home One Line P1 நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொவிட் -19 தொற்றுப் பரவுவதைத் தடுக்க இது உதவும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு முன்மொழியப்படும் என்று சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“… நாம் பொருளாதாரத் துறையை மட்டும் அனுமதிப்போம், பிற விசயங்களை கடுமையாக்குவோம்,” என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய அனைத்து வகையான கூட்டங்களையும் குறைக்க வேண்டும், இதனால் கொவிட்-19 தொற்று பரவுவதை தடுக்க முடியும்.

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணையின் போது, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. மேலும் கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரில் அக்டோபர் 14 முதல் 14 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.