Home 13வது பொதுத் தேர்தல் பென்சியாங்கான் தொகுதியில் மீண்டும் ஜோசப் குரூப் போட்டி

பென்சியாங்கான் தொகுதியில் மீண்டும் ஜோசப் குரூப் போட்டி

839
0
SHARE
Ad

PKCALON 2கோத்தா கினபாலு,ஏப்ரல் 16 – சபா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான டான்ஸ்ரீ ஜோசப் குரூப், வரும் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாகத் தனது நடப்பு பென்சியாங்கான் நாடாளுமன்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடவுள்ளார்.

பிபிஆர்எஸ் (Parti Bersatu Rakyat Sabah) கட்சியின் தலைவரான குரூப், தனது வயது மூப்பின் காரணமாக அரசியலிருந்து விலகி கொள்வார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், மீண்டும் தனது தொகுதியை தக்க வைத்துக்கொள்ளப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

69 வயதான குரூப் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெந்சியாங்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும், சூக் சட்டமன்ற தொகுதியை பிபிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ எல்ரோன் ஆல்பெரட் ஆங்கின் மீண்டும் தக்க வைத்துக்கொள்ளப் போவதாகவும் ஜொசப் அறிவித்துள்ளார்.