Home நாடு ஜோசப் குரூப் 80-வது வயதில் காலமானார்!

ஜோசப் குரூப் 80-வது வயதில் காலமானார்!

429
0
SHARE
Ad
ஜோசப் குருப் – பிபிஆர்எஸ் கட்சியின் தலைவர்

கோலாலம்பூர் : சபாவின் பார்ட்டி பெர்சாத்து ராக்யாட் சபா கட்சியைத் தோற்றுவித்த அதன் முதல் தலைவரான ஜோசப் குரூப் தன் 80-வது வயதில் காலமானார்.

சபா அரசியலிலும், மலேசியாவின் மத்திய அரசாங்கத்திலும் பல்வேறு பதவிகள் வகித்த அவர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.

மனைவியையும் ஆறு பிள்ளைகளையும் கொண்ட அவரின் மகன் ஆர்தர் ஜோசப் குரூப் விவசாயம், உணவுப் பாதுகாப்பு துணையமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

பிபிஆர்எஸ் கட்சி 1994 முதல் 2023 வரை தேசிய முன்னணியில் அங்கம் வகித்தது. இந்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து அவரின் மகன் ஆர்தர் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

பிபிஎஸ் (பார்ட்டி பெர்சாத்து சபா) கட்சியிலிருந்து தன் அரசியலைத் தொடங்கிய அவர் 1985-இல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2008 முதல் 2018 வரை பென்சியாங்கான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

சபா மாநில அரசாங்கத்தில் பல பதவிகளை வகித்திருக்கும் அவர் சபா துணை முதலமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.