Home One Line P1 கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்

கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்

1300
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை 8.00 மணியளவில் உடல் நலக் குறைவால் செலாயாங் மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 78. தரமான அவரது கவிதைப் படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. “வெள்ளி நிலவு” என மலேசியத் தமிழ் இலக்கியவாதிகளால் அவர் போற்றப்பட்டார்.

அன்னாரின் நல்லுடல், கீழ்க்காணும் முகவரியில் உள்ள Pusat Jagaan Orang Tua Cahaya Maju என்ற முதியோர் இல்லத்தில் நண்பர்கள், பொது மக்கள் அஞ்சலி செய்வதற்காக இன்று காலை முதல் வைக்கப்பட்டிருக்கும் :

No: 2,Jalan Melati 1,
Taman SRI melati,
68100, Batu Caves, Selangor.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் காலை மணி 11.00 முதல் 12.00 மணிக்குள் செராஸ் இந்து மின்சுடலையில் அன்னாரின் நல்லுடன் தகனம் செய்யப்படும்.

மேல் விவரங்கள் வேண்டுவோர் கவிஞர் பாதாசனை 019-2401943 கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.