Home One Line P1 முகக்கவச விலை 70 சென்னாகக் குறைப்பு!

முகக்கவச விலை 70 சென்னாகக் குறைப்பு!

458
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நவம்பர் 1- ஆம் தேதியிலிருந்து 70 சென்னாகக் குறைக்கப்படும் என்று உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ அலெக்சாண்டர் நாந்தா லிங்கி இன்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் முகக்கவசங்களின் உச்சவரம்பு விலை 1 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது, இதன் போது முடிந்தால் இது மேலும் குறைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

“இந்த புதிய உச்சவரம்பு விலை 2011 விலை கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு சட்டம் மூலம் செயல்படுத்தப்படும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதால், பல்வேறு இடங்களில் முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.