Home One Line P1 அரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்

அரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்

473
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தில் சிறந்த ஒத்துழைப்புகள் புறக்கணிக்கப்பட்டால், அதன் விளைவுகளை கட்சி ஏற்கும் என்று முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் எச்சரித்துள்ளார்.

தேசிய கூட்டணி தலைமையிலான நிர்வாகத்தை கட்சி தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், புதிய அரசாங்கத்தை உருவாக்க பிகேஆர் மற்றும் ஜசெக உடன் இணைந்து செயல்படாது என்றும் அம்னோ உச்சமன்றம் கூறியதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் கட்சிகளுக்கிடையேயான கருத்தியல் வேறுபாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தைத் தாண்டி அரசாங்கம் இன்னும் அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அம்னோ முன்மொழிந்தது.

#TamilSchoolmychoice

கட்சியில் ஒரு தலைவராக இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக நஜிப் கூறினார். உச்சமன்றக் கூட்டத்திற்கு முன்பு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் முன்வைத்த மூன்று விருப்பங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ஒரு முகநூல் பதிவில் அவர் தெரிவித்தார்.

மற்ற இரண்டு விருப்பங்கள் பிற்காலத்தில் திடீர் தேர்தல்களுக்கு அழுத்தம் கொடுப்பது அல்லது பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் இணைந்து 15- வது பொதுத் தேர்தல் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதும் இடம் பெற்றிருந்தது.

நாட்டின் நிர்வாகத்தில் அதிக பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற அம்னோவின் அழைப்புக்கு மதிப்பு வழங்கப்படாவிட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்கும் என்று நஜிப் கூறினார்.

“பொருளாதாரம் மோசமடையும்போது அம்னோவும் குற்றம் சாட்டப்படும். மிகவும் தேவைப்படும் சபாவுக்கான சிறப்பு உதவி இன்னும் காணப்படவில்லை. ”

அம்னோ தலைவர்கள் மற்றும் அடிமட்டத்தினரிடமிருந்து பலமுறை அழைப்பு விடுத்திருந்தாலும், பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான “பயனற்ற” திட்டத்தையும் மீறி கடன் தள்ளுபடியை நீட்டிக்கத் தவறியதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

இந்த திட்டத்தில், பெர்சாத்து தவிர அம்னோ அல்லது தேசிய கூட்டணியில் வேறு எந்த கட்சியும் ஈடுபடவில்லை என்று நஜிப் கூறினார்.

“அம்னோ இந்த அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.