Home One Line P1 தப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது

தப்பி ஓடிய மக்காவ் மோசடி கும்பல் தலைவர் கைது

608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாகிய பின்னர், மக்காவ் மோசடி மற்றும் இயங்கலை சூதாட்ட கும்பல் தலைவரான கோ லியோங் இயோங், காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

கோ, 32, அல்லது ஆல்வின் என்று அழைக்கப்படும் இந்நபர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் சீன நாட்டவர் என்று நம்பப்படும் ஒரு பெண்ணுடன் பகாங்கில் ஒரு தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் 12- ஆம் தேதி முதல் காவல் துறை நடத்திய உளவின் விளைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இதுவரை, சந்தேக நபருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணின் நிலை இன்னும் விசாரணையில் உள்ளது. ஆல்வின் குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (POCA) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

பிரபலங்கள் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ‘பணமோசடி’ வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஆல்வின் முன்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) விசாரிக்கப்பட்டு வந்தார்.

சீனாவில் மக்காவ் மோசடி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளராக நம்பப்படும் சந்தேக நபர், அக்டோபர் 11-ஆம் தேதி புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையகத்தில் வேலி ஏறி தப்பி ஓடிவிட்டார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றி இயங்கலை சூதாட்டத்தை நடத்தியதில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் எம்ஏசிசி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடினார்.