Home One Line P1 பத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது

பத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது நிறுத்தவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.

மத்திய அரசியலமைப்பின் கீழ் விதிகள் தெளிவாக உள்ளன என்று அவர் கூறினார். அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ லீயின் மரணத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

“அரசியலமைப்பின் கீழ், நாடாளுமன்றத் தொகுதி காலியாக இருக்கும் போது அல்லது நாடாளுமன்ற கலைப்பு இருக்கும்போது, 60 நாட்களுக்குள் ஒரு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.

#TamilSchoolmychoice

“எனவே இடைத்தேர்தல் தொடர முடியுமா, வேண்டாமா என்பதை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது ” என்று இஸ்மாயில் கூறினார்.