Home One Line P1 எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியவரை காவல் துறை தேடுகிறது

எம்ஏசிசியால் விடுவிக்கப்பட்ட பின்னர் தப்பி ஓடியவரை காவல் துறை தேடுகிறது

466
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் தப்பி ஓடியதை அடுத்து காவல் துறை அவரைத் தேடி வருகின்றனர்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இயங்கலை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் கோ லியோங் யியோங்கை காவல் துறைத் தேடுவதாக புக்கிட் அமான் இயக்குனர் ஹுசிர் முகமட் ஓர் அறிக்கையில் கூறினார்.

பொது விளையாட்டு வீடுகள் சட்டம் 1953- இன் பிரிவு 4 (1) (சி)- இன் கீழ் கோ மீது மூன்று விசாரணைகள் உள்ளன என்று ஹுசிர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மக்காவு ஊழலில் ஈடுபட்டதற்காக எம்ஏசிசி பிணையில் விடுவிக்கப்பட்ட தருணத்தில் சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார்,” என்று அவர் கூறினார்.

தகவல் உள்ளவர்கள் செராஸ் காவல் துறைத் தலைவர் அகமட் சாம்ரி ஜெயை 012-8993622 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரி முகமட் பைசால் அசுவாரை 017-3126411 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.