Home One Line P1 நாடாளுமன்ற அமர்வு 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

நாடாளுமன்ற அமர்வு 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

620
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்  காரணமாக இன்றைய நாடாளுமன்ற அமர்வு 1 மணியுடன் நிறுத்தப்பட்டது.

இந்த முடிவு இன்றைய அமர்வுக்கு மட்டுமா அல்லது முழு வாரத்திற்குமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

காலை 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுக்கு பின்னர் காலை 10.30 மணிக்குப் பிறகு சபாநாயகர் அசார் அசிசான் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

முகமட் அஸ்மின் அலி (பெர்சாத்து-கோம்பாக்), அகமட் சாஹிட் ஹமிடி (தேசிய முன்னணி-பாகன் டத்தோ), இஸ்மாயில் சப்ரி யாகோப் (அம்னோ-பெரா), ஷாஹிடான் காசிம் (தேசிய முன்னணி-அராவ்), தக்கியுடின் ஹாசன் (பாஸ்-பாசிர் புத்தே), அந்தோனி லோக் (ஜசெக-சிரம்பான்), ஜோஹாரி அப்துல் ரஹ்மான் (சுங்கை பட்டாணி- பிகேஆர்), ஹாசானுடின் முகமட் யுனுஸ் (பாஸ்- உலு லாங்காட்), ரொஸ்மான் இஸ்லி (வாரிசாந் லாபுவான்) ஆகியோர் அந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொவிட் -19 காரணமாக நாடாளுமன்ற விதிகள் 12 (1) இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் செகாம்புட் மாவட்டத்தின் கீழ் இருப்பதாகவும், கொவிட் -19 நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“கூட்டத்தின் அடிப்படையில் (சபாநாயகருடன் ), நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே முடிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.