கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான அதன் பரிந்துரைகளில் தற்காலிக கடன் தள்ளுபடி மற்றும் கூடுதல் பண உதவிக்கு அம்னோ இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 2021 வரவு செலவு திட்டம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மணி நேர கூட்டத்தில் இளைஞர் பிரிவு தனது பரிந்துரைகளின் பட்டியலை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிசுக்கு வழங்கியதாக கூறியிருந்தார். அதனை இன்று அதன் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“கொவிட் -19 தொற்றுநோயால் மோசமான பொருளாதாரச் சிக்கல், உயிர்வாழ்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு சிரமங்களை எதிர்கொள்ளும் மற்றும் போராடும் மக்களுக்கு உதவுவதற்காக, வரவு செலவு திட்டத்தில் இவை பரிசீலிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இந்த திட்டங்களில் “விரிவாக்க வரவு செலவு திட்டம்” உள்ளது, இதில் மக்கள் நலனுக்காக உதவிகளை வழங்குவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு கடன் தள்ளுபடி நீக்க வேண்டும் என்றும், தொற்றுநோயால் வேலை இழந்தவர்களுக்கு பண உதவி, பி40 மற்றும் எம் 40 குழுக்களில் பெற்றோர்களுக்கும் உதவ வேண்டும் என்று இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.