Home One Line P1 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும்

524
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் முதல் நாள் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 2) தொடங்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொவிட்-19 தொற்றைத் தடுப்பதில் தங்கள் பங்கை வகிக்குமாறு மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் அறிவுறுத்துகிறார்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, இந்த விவகாரத்தில் ஒன்றுபடவும், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் நினைவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

“மாண்புமிகு உறுப்பினர்கள் அறிந்திருக்கும்படி, மலேசியா உட்பட உலகம் முழுவதும் கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. இது இந்த நாட்டின் மக்கள் உட்பட பல கட்சிகளை பாதிக்கிறது.

“அரசியல் சித்தாந்தங்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து வேறுபாடுகளையும், சச்சரவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்கவும், கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் உதவவும் நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை விவரங்களை விநியோகிப்பது உட்பட, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அசார் கூறினார்.

மாநிலத்தின் தற்போதைய கொவிட் -19 நிலைமையைத் தொடர்ந்து சபாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்வுக்கு முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“உங்கள் ஒத்துழைப்புக்காக, தனிமைப்படுத்தப்பட்டமைக்காக சபாவிலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். உண்மையில் அவர்களிடமிருந்து ஒரு பெரிய தியாகம்,” என்று அவர் கூறினார்.