Home One Line P2 கொவிட்19: உலக சுகாதார நிறுவன இயக்குநர் தனிமைப்படுத்தப்பட்டார்

கொவிட்19: உலக சுகாதார நிறுவன இயக்குநர் தனிமைப்படுத்தப்பட்டார்

511
0
SHARE
Ad

ஜெனீவா: உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கொவிட்-19 தொற்றுக் கண்டவருடன் தொடர்பில் இருந்ததால், தாம் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகள், தடுப்பூசி சோதனைகள் குறித்து தொடர்ச்சியாக அவர் தெரிவித்து வந்துள்ளார்.

“கொவிட்-19 தொற்று பாதிப்பு உறுதியான நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார நிறுவன வரைமுறைகளின்படி, என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம், ” என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொவிட்-19 தொற்று அடுத்த சில மாதங்களிலேயே ஒட்டுமொத்த உலகத்தையும் பாதித்தது.