Home One Line P1 பினாங்கு பாயான் லெபாஸ், பத்து மாவுங்கில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

பினாங்கு பாயான் லெபாஸ், பத்து மாவுங்கில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று சிரம்பான் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்பட்ட நிலையில்,  நவம்பர் 6 முதல் 19 வரை தென்மேற்கு பினாங்கின் துணை மாவட்டங்களும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சின் ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சகம் இங்கு 35 கொவிட் -19 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இதில் 22 புதிய சம்பவங்கள் உள்ளன.

#TamilSchoolmychoice

பினாங்கு அனைத்துலக விமான நிலையம், குயின்ஸ்பே வணிக வளாகம், இரண்டாவது பினாங்கு பாலம், பாயான் லெபாஸ் தொழில்துறை மண்டலம் மற்றும் பத்து மாவுங்கில் உள்ள வீட்டுப் பகுதிகள் இந்த கட்டுப்பாட்டுக்குள் அடங்கும்.