Home One Line P1 பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மூன்றாவது சுற்று அளிக்கப்படும்

பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மூன்றாவது சுற்று அளிக்கப்படும்

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் தொகை மூன்றாவது சுற்றை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது.

2,500 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 1,000 ரிங்கிட் கிடைக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு 1,800 ரிங்கிட் கிடைக்கும்.

2,501 ரிங்கிட் மற்றும் 4,000 ரிங்கிட்டுக்கு இடையில் வருமானம் உள்ள குடும்பங்கள் 800 ரிங்கிட்டைப் பெறுவார்கள். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்கள் 1,200 ரிங்கிட்டைப் பெறுவார்கள்.

#TamilSchoolmychoice

4,001 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரை வருமானம் உள்ள குடும்பங்கள் 500 ரிங்கிட்டைப் பெறுவார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் 750 ரிங்கிட்டைப் பெறுவார்கள்.

2,500 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் உள்ள தனிநபர்கள் 350 ரிங்கிட் பெறுவார்கள்.