Home One Line P2 அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

590
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தலைப்பைப் பார்த்ததும் மீண்டும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலா என ஆச்சரியப்படாதீர்கள்!

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரவு செலவுத் திட்டத்திற்காக தொடங்கியபோது, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் எழுந்து நின்று, இது முக்கியமான நிகழ்ச்சி என்பதால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற அவைக்குள் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது நாடாளுமன்ற அவையில் ஒரு தடவைக்கு அதிக பட்சம் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நடைமுறையை தற்காலிகமாக விலக்கி விட்டு, முக்கியமான வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்புக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அனுமதிக்க வேண்டும் என அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் பரிந்துரைக்கு உடனடியாக அம்னோவின் புங் மொக்தான் ராடின், தாஜூடின் அப்துல் ரஹ்மான், அகமட் ஜாஸ்லான் யாக்கோப், நோ ஓமார் ஆகியோர் உடனடியாக எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவைக்குள் அனுமதிக்கும் முடிவை அவைத் தலைவர் அசார் அசிசான் ஹாருண் அறிவித்தார்.

வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வரும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசிய முன்னணி-அம்னோ கட்சியினர் இந்த முறை ஆதரவு தெரிவித்தது ஒரு வித்தியாசமான நாடாளுமன்றக் காட்சியாக அமைந்தது.