சபாவின் லாஹாட் டத்துவில் தாமான் காசானா இண்டா மற்றும் முத்தியாரா காசி பொது வீட்டுத் திட்டங்கள் இதில் அடங்கும். சிலாங்கூரில் பிளாசா ஹென்டதியான் காஜாங்; சரவாக் கூச்சிங்கில் கம்போங் ஹாஜி பாக்கி; மற்றும் நீலாயில் உள்ள புத்ரா பாயிண்டில் தொழிலாளர் விடுதிகளுடன் இரண்டு இடங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், லாஹாட் டத்துவில் உள்ள கம்போங் சபா பாரு நாளை முதல் நவம்பர் 23 வரை மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இது அங்குள்ள கொவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்மையில் 102 சம்பவங்கள் பதிவானதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.