Home One Line P1 தமிழ் பள்ளிகளுக்கான நிதியை சரவணன் உறுதிப்படுத்தினார்

தமிழ் பள்ளிகளுக்கான நிதியை சரவணன் உறுதிப்படுத்தினார்

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்திய சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததற்காக வரவு செலவு திட்டம் குறித்து சமூகம் அதிருப்தி தெரிவித்ததாகவும், சரவணன் கூறினார்.

எவ்வாறாயினும், இன்று காலை நிதி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சர்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு அணுகுமுறை மாற்றப்பட்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு கல்வி அமைச்சகத்திற்காக ஒதுக்கப்பட்ட 60 பில்லியன் ரிங்கிட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“கடந்த முறை, தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த முறை அனைத்தும் கல்வி மேம்பாட்டுக்காக 60 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன,” என்று மனிதவள அமைச்சரான சரவணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

2021- ஆம் ஆண்டிற்கான மொத்த வரவு செலவு திட்டத்தில் (322.5 பில்லியன்) சுமார் 15.6 விழுக்காடு கல்வி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் ஒவ்வொன்றும் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 50 மில்லியனைப் பெற்றன.

ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திலும் தமிழ் சீனமொழிப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய சரவணன், கல்வி அமைச்சர் சரியான ஒதுக்கீட்டை விரைவில் வெளிப்படுத்துவார் என்று தெரிவித்தார்.

“முந்தைய தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கங்களின் போது நாம் பெற்றதைப் போலவே, நாம் (தமிழ் மற்றும் சீனமொழிப் பள்ளிகள்) இதேபோன்ற தொகையைப் பெறுவோம் என்று நம்புகிறேன். அப்போது 100 மில்லியன் ரிங்கிட் பெற்றோம்,” என்று அவர் கூறினார்.