Home One Line P1 கொவிட்19: 2 வாரங்கள் வீட்டிலேயே இருங்கள், தொற்று சங்கிலியை உடைக்கலாம்!

கொவிட்19: 2 வாரங்கள் வீட்டிலேயே இருங்கள், தொற்று சங்கிலியை உடைக்கலாம்!

775
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியர்கள் இரண்டு வாரத்திற்கு வீட்டிலேயே தங்கியிருந்தால், கொவிட் -19 நோய்த்தொற்றுகளின் சங்கிலி உடைக்கப்படலாம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“எல்லோரும் சுகாதார அமைச்சுடன் ஒத்துழைக்க முடிந்தால், எல்லோரும் தங்கள் பங்கை ஆற்றினால் இது சாத்தியம். நாம் ஒவ்வொருவரும் இணங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இரண்டு வாரங்கள் நாம் வீட்டில் தங்க முடிந்தால், நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும், ” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

எவ்வாறாயினும், கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக முறைக்கு இணங்குவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று அவர் கூறினார். மாவட்ட மற்றும் மாநில பயணங்களை கட்டுப்படுத்துவது தொற்றுநோயைக் குறைப்பதற்கான சிறந்த கருவியாக உள்ளது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

” நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்க என்னையும் பொதுமக்களையும் நினைவூட்ட விரும்புகிறேன். உங்களால் முடிந்தால், இரண்டு வாரங்கள் வீட்டிலேயே இருங்கள். உங்களால் முடியாவிட்டால், உங்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால், சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக முறைகளை நீங்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ” என்று அவர் கூறினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலக்கட்டத்தில், மலேசியாவில் கொவிட் -19 தொற்று வீதம், செப்டம்பர் 20 அன்று 2.2 லிருந்து 1.0 க்குக் குறைத்துள்ளதாக நூர் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.