Home One Line P2 மின்னல் வானொலி அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்துகள்

மின்னல் வானொலி அறிவிப்பாளர்களின் தீபாவளி வாழ்த்துகள்

894
0
SHARE
Ad

கோலாலம்பூர் :நாளை சனிக்கிழமை நவம்பர் 14 கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மின்னல் பண்பலை வானொலியில் அறிவிப்பாளர்கள் தங்களின் தீபாவளி அனுபவங்களையும், வானொலி பணி அனுபவங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரேமா கிருஷ்ணன்

பிரேமா கிருஷ்ணன்

அன்பு நேயர்கள் அனைவருக்கும் பிரேமா கிருஷ்ணனின் மனமார்ந்த தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

இந்த வருடம் நமக்கு மாறுபட்ட தீபாவளி கொண்டாட்டமாக அமைந்துள்ளது. ஆம், கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து நம் அன்புகுரியவர்களை பாதுகாக்கும் அதிக பொறுப்பு நமக்கு இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளைப் பின்பற்றி, தீபாவளியைக் கொண்டாடுவோம்.

#TamilSchoolmychoice

என்னுடைய தீபாவளி, என் அன்புக் கணவர் சுரேஷ், பிள்ளைகள் லக்‌ஷன், ஷாமித்ரா, தீவாஷன் இவர்களோடு மகிழ்ச்சியாக விதிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடப் போகிறேன். நம் உறவுகளோடு அன்பை பரிமாறிக்கொள்வோம். அதே வேளையில், ஒளி வீசும் தீபாவளியில் இயன்றதை மற்றவர்களுக்குக் கொடுப்போம். சிறு உதவிகளை செய்வோம், பகிர்ந்துக் கொண்டாடுவோம். சுற்றத்தாரோடு அகமகிழ்வோம். நம்முடைய மகிழ்ச்சியை அவர்களுக்கும் பங்கிட்டு கொடுப்போம். நல்லெண்ணங்கள் நம்முடைய மனதில் தூய ஒளியாய் இந்நாளில் மட்டும் இல்லாமல் எந்நாளிலும் மிளிரச் செய்வோம். இனிய தீபாவளி வாழ்த்துகள்.- அன்புடன், அறிவிப்பாளர் பிரேமா கிருஷ்ணன்

சசி

சசி

புதிய நடைமுறையில் இந்த வருட தீபாவளியை நேயர்களோடு கொண்டாடும்போது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த வருடம் அதே மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கொண்டாடுவோம். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளோடு தீபாவளியை உறவுகளோடு கொண்டாடுவோம். வீட்டில் அதிக நேரம் செலவு செய்து மின்னல் எப் எம் சிறப்பு நிகழ்ச்சிகள் கேட்க மறக்க வேண்டாம். உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி.

“ஒளித்தருவோம்” என்ற கருபொருளோடு இந்த வருட தீபாவளியை மின்னல் எப் எம் கொண்டாடி கொண்டிருக்கின்றது. சிறிய உதவியாக இருந்தாலும் , தேவைப்படும்போது செய்யக்கூடிய உதவி பிறர் வாழ்க்கையில் ஒளி கொடுக்கும். மற்றவர்களின் முகத்தில் புன்னகையைக் கொடுத்து , நம் மனதை அன்பின் ஒளியால் நிறைப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.அன்புடன் உங்கள் அறிவிப்பாளர் சசி

பார்வதி நாகராஜன்

பார்வதி நாகராஜன்

புதிய நடைமுறையில் இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் மலேசிய மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

ஒருத்தருடைய மதிப்பு அவர் செய்யும் செயலைப் பொறுத்து இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க. இந்த ஆண்டு பார்த்தீங்கன்னா கோவிட் 19 கிருமி தொற்றால் பலர் பல வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நிஜமாகவே நம்முடைய உதவி தேவைப்படுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்கள் வாழ்க்கையில் ஒளி தருவோம். மன நிறைவோடு இந்த தீபாவளித் திருநாளை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடுவோம்அறிவிப்பாளர் பார்வதி நாகராஜன்

கிஷன்

கிஷன்

அன்பு நேயர்களுக்கு,

புதிய இயல்பில் ஒளி தருவோம் என்ற உன்னத கருப்பொருளோடு இவ்வருட தீபாவளியை மற்ற உயிர்களின் வாழ்வில் இருள் நீக்கி, ஒளி பெருக்கி அர்த்தமுள்ள தீபாவளியை பாதுகாப்பாய் கொண்டாடுவோம். நம்மால் முடிந்த சின்னதொரு உதவிகள் கூட அவர்களுக்கு பெரிதளவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் – ஏற்படுத்தியிருக்கலாம். அது பிராணிகளாக கூட இருக்கலாம். நாம் செய்யும் அந்த உதவியில் பிறர் மகிழ்ந்திடக் காண்பதில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

இந்த இனிய நாளில் எல்லோரும் மகிழ்ந்திருப்போம், பிறரிடம் புன்னகை செய்வோம், அதுவே “ஒளி தருவோம்” என்ற சுலோகத்தின் அர்த்தம். தித்திக்கும் தீபாவளித் திருநாளில் தீபங்களின் வரிசையில் வீடும் இந்த நாடும் ஒளி பெருகியிருப்பதை போல் ‘ஒளிதருவோம்’ என்ற உன்னத நோக்கத்தின் வழி பிறர் மனதில் ஒளி பெருக செய்வோம்.ஒன்றிணைந்து இந்த அழகிய ஒளி சங்கிலியை பெருகச் செய்வோம்.மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்அறிவிப்பாளர் கிஷன்

அஷ்வினி

அஷ்வினி

நம் வாழ்வில் தீபங்கள் ஏற்றி வெளிச்சம் கொண்டு வருவதற்கான பண்டிகை தான் தீபாவளி. இந்த வருடம் இருளில் வெளிச்சம் கொடுக்கும் ஒளியாய் நாம் இருப்போம். #OLITHARUVOM குடும்பத்தோடு சேர்ந்து தர விதிமுறைகளை (SOP) பின்பற்றி மிதமான விதத்தில் தீபாவளியை கொண்டாடுவோம்

மேலும் மனதார நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அனைவரும் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வோம். இன்று போல் என்றும் நாம் ஒளிதருவோம், அடுத்தவரையும் ஒளி தர சொல்வோம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!அஷ்வினி

பர்வீன் (பருவிந்தராஜ்)

பருவிந்தராஜ்

ஒவ்வொரு வருடமும் மத்தாப்பு கொளுத்தி , புத்தாடை உடுத்தி கலகலவென்று குடும்பத்தோடும், சொந்தங்களோடும் கொண்டாடிய தீபாவளிக்கு இம்முறை விடுமுறை கொடுத்து புதியதொரு நடைமுறையில், புதியதொரு சிந்தனையுடன் இந்த வருட தீப ஒளியை ஏற்றுவோம். மலேசியா வாழ் அனைத்து மக்களுக்கும் எனது அன்பு நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகத்திற்கு தேவையான அத்தனை அன்பையும் நாம் கொடுப்போம். அன்பு நிறைந்த உலகத்தைக் கொண்டாட இந்த வருட தீபாவளி பிள்ளையார் சுழியாக அமையட்டும். உங்கள் வீட்டில் பூக்கும் பூக்களின் ஆயுளும் கூடட்டும்; அரிசி கோலத்தில் உலாவரும் எறும்பும் சந்தோசமாய் வாழட்டும். உருவத்தில் தனித்தனியாய் இருந்தாலும் மனதளவில் ஒன்றிணைந்து மற்றவரிடத்தில் ஒளியேற்றுவோம். – அறிவிப்பாளர் பருவிந்தராஜ் சண்முகம்.

மோகன்

மோகன்

ஒளித்தருவோம். புதிய இயல்போடு இந்த வருட தீபாவளியை நாம் கொண்டாடவிருக்கின்றோம். சவால்மிக்க காலக்கட்டம் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் இந்த வருடம் அதே மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கொண்டாடுவோம். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளோடு தீபாவளியை உறவுகளோடு கொண்டாடுவோம்.

சிறிய உதவியாக இருந்தாலும் , தேவைப்படும்போது செய்யக்கூடிய உதவி பிறர் வாழ்க்கையில் ஒளி கொடுக்கும். மற்றவர்களின் முகத்தில் புன்னகையைக் கொடுத்து, நம் மனதை அன்பின் ஒளியால் நிறைப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.அறிவிப்பாளர் மோகன்

காயத்திரி கண்ணம்மா கைலாசம்

காயத்திரி கண்ணம்மா கைலாசம்

நல்லெண்ணங்களைத் திரியாக்கி, நம்பிக்கையை விளக்காக்கி, அன்பெனும் நெய்யூற்றி ஒளியேற்றிடுவோம். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி, அனைவரின் பாதுகாப்பையும் முன்னிருத்தி இவ்வருட தீபாவளியை புதிய இயல்போடு கொண்டாடுவோம்.

ஆரவாரம் இல்லா, ஆர்ப்பாட்டம் இல்லா தீபாவளி இது. ஆனால் அன்பு நிறைந்த தீபாவளி. சுய நலம் போக்கி பொது நலத்தை நம்முள் விதைத்திருக்கும் தீபாவளி. உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒளியேற்றி குடும்பத்தோடு அன்பு பகிர்ந்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம். பிறர் வாழ்விலும் ஒளியேற்றி வைப்போம். அனைவருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வாழ்வில் உள்ள எல்லாத் தடைக் கற்களும் படிக்கற்களாக மாறி துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர இனிய தீபாவளி வாழ்த்துகள். எண்ணம் போல் வாழ்க்கை! – அன்புடன் காயத்திரி கண்ணம்மா கைலாசம்

குணசுந்தரி நாகராஜா

குணசுந்தரி நாகராஜா

பேசாமல் பேசும் அன்பு மொழி புன்னகை…. இந்த தீபத் திருநாளில் புன்னகை குறையாமல், அகம் மலரக் கொண்டடுவோம் உற்றார் உறவினரோடு! நரகாசுரன் மறைந்த நாளாக அல்ல, உள்ளத்தில் உள்ள இருள் மறைந்து, புதுப் புது நட்புறவு பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்வோம். இனிய தீபாவளி வாழ்த்துகள் – குணசுந்தரி நாகராஜா

சத்யா

சத்யா

இந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை உங்கள் வாழ்வில் நிரப்பட்டும். ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும். ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையைக் கொடுக்கட்டும். மகிழ்ச்சி என்றென்றும் உங்களுடைய மனதில் தங்கட்டும். புத்திய இயல்பில் கொண்டாடும் இந்த தீபாவளி நமக்கு அர்த்தமுள்ள நாளாக அமையட்டும். நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளோடு மிக பாதுகாப்பாய் கொண்டாடுவோம்; கோவிட் 19-லிருந்து மிக விரைவில் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு! தீபாவளியின் அழகு “எனது” என்பதல்ல “நமது” என்பதில் அடங்கும். ஒளிதருவோம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! – சத்யா