Home One Line P2 ஆஸ்ட்ரோ : தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் இயக்குநர்களுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் இயக்குநர்களுடன் சிறப்பு நேர்காணல்

644
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கண்டு மகிழ டெலிமூவிக்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் (variety shows), தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், வலைத்தளத் தொடர்கள் (web-dramas), ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தரமான, உள்ளூர் தமிழ் உள்ளடக்கத் தேர்வுகள் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு உள்ளன.

ஆஸ்ட்ரோவில் இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை முன்னிட்டு முதல் ஒளிபரப்பாக ஒளியேறும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் இயக்குநர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான கருத்துகளை இங்கே வழங்குகிறோம்:

கார்த்திக் ஷாமலன், இயக்குநர், “மணிரத்னம் வந்தாச்சு”

கார்த்திக் ஷாமலன்
  • சாதனங்களில் தற்பொழுது பரவலாகப் பகிரப்படும் மின்-வாழ்த்துக்களால் மறைந்து போனக் கலாச்சாரமான தீபாவளி வாழ்த்து அட்டைகளின் நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட கதையே, மணிரத்னம் வந்தாச்சு.
    தொற்றுநோயின் விளைவாக கனடாவிலிருந்து தாயகம் திரும்பிய மணி, தனது கிராமவாசிகளுக்குத் தீபாவளி அட்டைகளை அனுப்ப முயற்சிக்கும் போது ஒரு மதிப்புமிக்க பொருளைத் தொடர்ந்து துரத்தும் ஒரு குழுவைச் சந்திக்கவே அவரின் முயற்சி எதிர்மறை உணர்வுகளுடன் தொடர்புடைய ஒரு கனவாக மாறுகின்றது. இத்தொடரின் மூலம், தீபாவளி வாழ்த்து அட்டைகளின் முக்கியத்துவத்தையும் தனிப்பட்ட பிரச்சினைகளை சமூக தளங்களில் பகிர்வதன் விளைவுகளைக் குறித்தும் விழிப்புணர்வை விதைக்க விரும்புகிறேன்.

கே. கவி நந்தன், இயக்குநர், “மக்களே சும்மா உக்காருங்க & எம்சிஓ தீபாவளி கொண்டாட்டம்”

  • “மக்களே சும்மா உக்காருங்க” டெலிமூவியின் கதை எம்சிஓ காலக் கட்டத்தை மையமாக கொண்டிருப்பதால் அதன் பெயர் சுருக்கமாக எம்சிஓ-ஆக இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது.கருத்துக்கள் வேறுபாடுகள் மற்றும் வயது காரணமாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பற்ற உறவை இக்கதைச் சித்தரிக்கின்றது. மக்களே சும்மா உக்காருங்க டெலிமூவியின் நடிகர்களின் குணநலன்களை திரையில் காட்ட நினைத்ததோடு வித்தியாசமான ஒன்றைச் செய்ய நினைத்தேன். இதுவே எம்சிஓ தீபாவளி கொண்டாட்டத்தை இயக்க எனக்கு ஊக்கமளித்தது. இது ஒரு சிறந்த அனுபவமாகும்.

தேவ் ராஜா, இயக்குநர், “அன்புக்கு நான் அடிமை”

தேவ் ராஜா
  • முகேன் ராவின் இரசிகர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிப்பதற்காக (tribute) ‘ரீச் புரோடக்‌ஷன் ’ என்னை அணுகியது. அவரது வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவரது குடும்பத்தினரையும் இரசிகர்களையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்ய நாங்கள் விரும்பினோம். அவரது சில பாடல்களும் இந்நிகழ்ச்சிக்காகப் புதுப்பிக்கப்பட்டன.கமல்ஹாசன் தொகுப்பாளராக இருப்பதால் நானும் ஒரு பிக் பாஸ் ரசிகன்! அதுமட்டுமின்றி, பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் சாண்டி மாஸ்டர்; ஐபிபி ஸ்டுடியோவின் (IBP studios) பிரதிநிதிகள் உள்ளிட்ட பல விருந்தினர்களை நாங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்தோம்.

ரத்னா கே நடராஜன், தயாரிப்பாளர், “மலரும் புன்னகை” & தலைமை நிர்வாக அதிகாரி, Mojo Projects Sdn Bhd:

#TamilSchoolmychoice

  • 50 முதல் 70-ஆம் ஆண்டுகள் வரையிலான பாடல் பட்டியலையும், 8-பீஸ் இசைக்குழுவையும் (8-piece band) நிர்வகிக்க சுமார் 2 வாரங்கள் ஆனது. சிறந்த பாடகர்களின் இனிமையான குரல்களில் பாடல்களையும், இசை இயக்குநர் லாரன்ஸ் சூசை தலைமையிலான திறமையான இசைக்கலைஞர்களின் நேரலை படைப்புகளையும் உள்ளடக்கிய தமிழ் இசை நிகழ்ச்சியை இரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.கலைஞர்களின் தேர்வுமுறை மிகவும் கடினமான ஒன்றாகும். 90 நிமிட நிகழ்ச்சிக்கு போதுமான மாறுபாட்டைக் கொண்டிருப்பதற்காக நாங்கள் முதலில் 3 ஆண் மற்றும் 3 பெண் பாடகர்களைத் தேர்வு செய்தோம். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் நோக்கில் 1980-களில் பிரபலமான ‘கலப்படம்’ தொடரில் இடம்பெற்ற நகைச்சுவை நடிகர்களான திரு எஸ். பரஞ்சோதி, திரு ஏ.எம்.ஆர் முருகேசு ஆகியோரும் இதில் அடங்குவர்.பாடகர்களின் திறமை மற்றும் மாறுபட்ட அமைப்புகளில் பாடும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகழ்பெற்ற மலேசியக் கலைஞர்களான டத்தின் ஸ்ரீ மணிமாலா, எம். எஸ். ப்ரீடோ, டி.எம்.எஸ். சிவகாந்தன், ஷர்மிளா சிவகுரு, பிரீதா பிரசாத் மற்றும் ஆனந்தா ராஜாராம் ஆகியோரை நிர்ணயிக்க ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்கிய ஆஸ்ட்ரோ குழுவினரின் இவ்வரிய வாய்ப்பினை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கும் இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கார்த்திக் ஷாமலன், இயக்குநர், “நரன்”

  • “நரன்” படைப்பின்  திரைக்கதை திரையரங்குகளுக்கான ஒன்று. ஆனால், அதனை ஒரு டெலிமூவியாக ஏற்றுக்கொண்ட ஆஸ்ட்ரோவிற்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.இப்போது, அதிகமான இரசிகர்களை நரன் சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி. எல்லாமே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால் நரன்-தொலைக்காட்சிப் படத்தின் திரைக்கதை (ஸ்கிரிப்ட்) மிகவும் விரிவானது. கர்ணன் ஜி கிராக் மற்றும் சசிகுமார் ஆகியோருடன் ஒரு நீண்ட கதைக்காகப் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். அவர்களை எனது இயக்கத்தில் இடம்பெறச் செய்ததில் மகிழ்ச்சி.நரன் ஒரு சைக்கோ த்ரில்லர். இதில் புகுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இரசிகர்களை நேர்மறையாகப் பாதிக்கும். ஒரு ‘தீய’ கதாபாத்திரம் மற்றொரு ‘தீய’ கதாபாத்திரத்தை எதிர்கொள்ளும் த்ரில்லருக்கான யோசனை எனக்கு எப்போதும் இருந்ததுண்டு.

    நரன்-இல், கதாநாயகன், வில்லன் இருவரும் தவறுகளை செய்து விட்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வர். சாதாரண பேச்சு மொழியில் நரன் என்றால் ‘கடவுள்’ என்று பொருள்படும். இந்த டெலிமூவியும் துர்கா தேவி ஒரு அரக்கனை எதிர்த்துப் போராடி வெல்வதைப் பற்றியது.

டேனேஸ் குமார், இயக்குநர், “வாங்க பழகலாம்”

  • தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் இசை, வண்ணங்கள், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றோடு தனது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் (‘balik kampung’) சூழலையும் சற்று நினைவுறுத்த உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியே ‘வாங்க பழகலாம் – ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’.எல்லோரும் இரசித்து மகிழும் வகையில் பல்வேறு விளையாட்டுகளும் நடனங்களும் உள்ளன. இப்பண்டிகை காலத்தில் குறிப்பாக சிஎம்சிஓ அமலில் இருக்கையில் இந்நிகழ்ச்சி நேர்மறையான உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
    டேனேஸ் குமார் – இயக்குநர்

    தயாரிப்பாளர், டாக்டர் விமலா பெருமாளும் நானும் முக்கியமான, மறந்துபோன பாரம்பரியக் கூறுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே இந்நிகழ்ச்சியை இயக்குவதற்கான யோசனை பிறந்தது. நாங்கள் ‘குடும்பத்தில்’ கவனம் செலுத்த முடிவு செய்தோம். இந்திய கலாச்சாரத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் அழைப்பதற்கு குறிப்பிட்ட ‘பெயர்கள்’ அல்லது உறவு முறைகள் உள்ளன. அப்பெயர்களுக்கும் உறவு முறைக்கும் ஏற்றவாறே அவர்களது பங்கும் இருக்கும். உதாரணமாக பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமனார், அண்ணன், தம்பி, சகலை என ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்கள் வெவ்வேறு உறவு முறையில் அழைக்கப்படுவர்.இந்தப் ‘பெயர்கள்’ தாய், தந்தைவழி குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வேறுபடும். இக்கலாச்சார கூறுகள் இன்னும் நடைமுறையில் இருந்தாலும், பிற கலாச்சார கூறுகள் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கத்தினால் மறைந்துக் கொண்டு வருகின்றன. பாரம்பரிய உணவு, உடைகள் மற்றும் குடும்ப ஒற்றுமையைக் காக்கும் பழக்கவழக்கங்கள் ஆகியவை காலங்கள் மாறவே மெல்ல மறைந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு தனிநபரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றும் குடும்பத்தையும் மதிப்பு மிக்க இந்தியக் கலாச்சாரத்தையும் இரசிகர்களுக்கு அறிவுறுத்த எண்ணினோம்.

தேவ் ராஜா, இயக்குநர், “தீபாவளி பொக்கிஷம்”

  • நான் மற்ற புதையல் வேட்டைகளை இயக்கியிருந்தாலும், இது சற்று மாறுப்பட்டது. ஏனெனில், ஒவ்வொரு நிலையத்திற்கும் (checkpoints) போட்டியாளர்கள் மகிழுந்தில் பயணிக்க வேண்டும். 16 கலைஞர்களைக் கொண்ட படப்பிடிப்பு சற்று சவாலாக இருந்தது.அதிக எண்ணிக்கையிலான புகைப்படக் கருவிகள் மற்றும் கலைஞர்கள் ரீதியில் ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு முக்கிய பங்கு இருந்ததால் அது படப்பிடிப்பை சவாலாக்கியது. எனவே, இந்நிகழ்ச்சியை சிறப்பாக இயக்க பல இயக்குநர்கள் உதவினர். மேலும், வெவ்வேறு இடங்களுக்குப் பயணிப்பது மற்றும் தொடர்பை (communication) நிலைநிறுத்துவதற்கு சற்று சவாலாக இருந்தது. இருப்பினும், நாங்கள் அச்சவால்களை வெற்றிக் கொண்டோம்.அணிகளுக்கு இடையே ஏற்பட்ட சவால்கள் மற்றும் போட்டிகள் மட்டுமே இறுதி தயாரிப்பில் காட்டப்பட்டதே தவிர, புகைப்படக் கருவிகளுக்கு பின்னால் ஏற்பட்ட சவால்கள் அல்ல. அனைவரும் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்.