Home One Line P1 கொவிட்19: இருவர் மரணம்- புதிதாக 822 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: இருவர் மரணம்- புதிதாக 822 சம்பவங்கள் பதிவு

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை 822 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 815 ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 7 பேர் தொற்றுக் கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 42,872 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

சபாவில் 259 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 21 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 178, நெகிரி செம்பிலானில் 225 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

சபாவைக் காட்டிலும் சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலானில் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 769 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 31,073- ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,497 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 86 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 2 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 302-ஆக உயர்ந்துள்ளது.