Home One Line P1 கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

641
0
SHARE
Ad
ஹாஸ்புல்லா ஓஸ்மான்

ரவுப் : பேராக் மாநிலத்தில் உள்ள கிரிக் நாடாளுமன்றத் தொகுதியின் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 16) காலமானார்.

பகாங் மாநிலத்திலுள்ள ரவுப் நகரின் மருத்துவமனையில் 63 வயதான அவர் இன்று மாலை 7.00 மணியளவில் காலமானார். அப்போது அவரது குடும்பத்தினர் அவரது அருகில் இருந்தனர்.

தேசிய வீடமைப்புக் கழகத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார். அவரது மறைவை கிரிக் அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ அஸ்னல் இப்ராகிம் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

மறைந்த ஹாஸ்புல்லாவின் நல்லுடலை கிரிக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

2018 பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் கிரிக் தொகுதியில் போட்டியிட்ட ஹாஸ்புல்லா பாஸ் வேட்பாளரைவிட 5,528 பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த பொதுத் தேர்தல் முடிவடைந்து இன்னும் 3 ஆண்டுகள் முழுமை பெறாததால் கிரிக் தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.