Home One Line P1 1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிட முடியாது!

1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிட முடியாது!

416
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளையும் வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் இரகசியத்தன்மை விதிக்கு உட்பட்டவை என்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதல் வேண்டும் என்று அது கூறியது.

திருடப்பட்ட சொத்துக்களுக்கு கோல்ட்மேன் சாச்ஸிடமிருந்து 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் உத்தரவாதம் வழங்கப்படுவதற்கும், இரகசியத்தன்மை விதிமுறை பொருந்தும் என்று அமைச்சரவைத் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எனவே, இரகசியத்தன்மை பிரிவின் அடிப்படையில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதால் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டபடி 1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை அரசாங்கத்தால் அணுக முடியாது,” என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தீர்வு ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு அணுகலை வழங்க முடியுமா என்று வினவிய வோங் சென் (சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.