கோலாலம்பூர்: சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக “கிரீன் டிரேவல் பப்பள்” முயற்சிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
மற்ற பச்சை மண்டலங்களுக்கு பயணிக்க விரும்பும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், பச்சை மண்டலங்களில் வசிப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் கூறினார்.
“எடுத்துக்காட்டாக, நெகிரி செம்பிலான் சிவப்பு மண்டலம். தம்பின் பச்சை மண்டலம். எனவே, தம்பினில் உள்ளவர்கள் பகாங்கிற்கு செல்ல அனுமதிப்போம். ஆனால், அவர்கள் சிவப்பு மண்டலங்கள் வழியாக பயணிக்க வேண்டும் என்பதால், அவர்கள் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
“மேலும், அவர்கள் செல்லும் வழியில் எந்த சிவப்பு மண்டலங்களிலும் நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் இலக்கை நோக்கி செல்ல வேண்டும், ” என்று அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இது நவம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருகிறது.