கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா தாம் தொடர்ந்து அம்னோவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், பெர்சாத்துவில் இணையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
பலவிதமான போராட்டங்கள், அழுந்தங்களைச் சந்தித்தாலும், தாம் அம்னோவிலிருந்து விலகப்போவதில்லை என்று கெதெரெ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேனா என்பதை அம்னோவில் பழையவர்கள அறிவார்கள், புதியவர்கள் என்னை அறிவதற்கு கடினம்தான்,” என்று அவர் கூறினார்.
சமீபத்தில், கெதெரெ பெர்சாத்து தொகுதி, அனுவார் மூசாவை அதன் கட்சியின் இணையுமாறு அழைந்திருந்தது. அம்னோ தோல்வியுற்ற கட்சி எனவும், அது வீழ்ந்துவிட்டது எனவும் அனுவார் மூசா கூறியதை அடுத்து, இந்த அறிக்கைகள் விடப்பட்டன.
நேற்று பேசிய அனுவார் மூசா, தாம் அம்னோவுடன் விசுவாசமாக இருந்தாலும், பிறரை வெறுக்கப் போவதில்லை எனவும், சாதாரணமாக இருக்க விரும்புவதாகவும் கூறினார்.
“மகாதீருடன் இருக்கும்போது, நான் அவருக்கு விசுவாசமாக இருந்தேன். இப்போது மகாதீர் அம்னோவை விட்டு வெளியேறிவிட்டார். நான் அம்னோவுடன் இருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, வெறுக்கப்படுகிறேன். நான் தேர்தலில் தோற்றேன், பல முறை வீழ்ந்தேன். ஆனால், நான் இன்னும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை,” என்ரு அனுவார் மூசா கூறினார்.