Home One Line P1 கூலிம், துவாரானில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்

கூலிம், துவாரானில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்

467
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூலிம், சுங்கை செலுவாங் துணைப்பிரிவு மற்றும் சபாவின் துவாரானில் உள்ள தாமான் டெலிபோக் ரியா ஆகிய இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் விதிக்கும்.

இது அந்த பகுதிகளில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இந்த உத்தரவு நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 வரை 14 நாட்களுக்கு அமலுக்கு வரும்.

சுங்கை செலுவாங்கில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடு 1,412 வீடுகளில் சுமார் 6,000 குடியிருப்பாளர்களை உள்ளடக்கும்.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சகம் இப்பகுதியில் 197 இலக்கு சோதனைகளை நடத்தியுள்ளது. அவற்றில் 50 கொவிட் -19 தொற்றுக்கு சாதகமானவை என்று இஸ்மாயில் மேலும் கூறினார். இருப்பினும், இந்த சோதனைகள் நடத்தப்பட்ட காலத்தை அவர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில், தாமான் டெலிபோக் ரியாவில், நவம்பர் 22 வரை கொவிட் -19 தொற்றுக்கு 2,609 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 253 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்மாயில் கூறினார். 581 சோதனைகள் இன்னும் முடிவுகள் நிலுவையில் உள்ளன.