Home One Line P2 நிவர் புயல் கரை கடந்தது – தமிழ்நாட்டில் 3 பேர் பலி

நிவர் புயல் கரை கடந்தது – தமிழ்நாட்டில் 3 பேர் பலி

920
0
SHARE
Ad
கடலூர் நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கும் தமிழக முதல்வர்

சென்னை : நேற்று கடும் மழையையும் புயலையும் தமிழகத்தில் ஏற்படுத்திய நிவர்  புயல் இன்று புதுச்சேரி மாநிலக் கரையைக் கடந்து கடந்தது. தற்போது கடல் மையத்தில் அந்தப் புயல் பலவீனமடைந்திருப்பதாக வானிலைத் துறை அறிவித்தது.

நிவர் புயல் தொடர்பான அண்மைய நிலவரங்கள் வருமாறு :

  • நேற்று புதன்கிழமை இரவு நிவர் புயல் தாக்கத்தால் கடுமையான மழை தமிழகம் எங்கும் பொழிந்தது. கடலோரங்களில் உள்ள பகுதிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. தமிழக அரசும் புதுச்சேரி அரசும் உடனடியாக பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது.
  • கடற்கரையோர பகுதிகளில் இருந்து சுமார் 100 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • பாதுகாப்பு கருதி அபாயகரமான இடங்களில் அரசாங்கம் மின்சாரத் தடையை அமல்படுத்தியது.
  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் பகுதிக்கு நேரடி வருகை தந்து புயல் நிலவரங்களைப் பார்வையிட்டார்.
  • சென்னை விமான நிலையம் இந்த புயல் காரணமாக 70 விமானப் பயணங்களை இரத்து செய்தது. இன்று வியாழக்கிழமை சென்னை விமான நிலையம் மீண்டும் மாமூல் நிலைக்கு திரும்பியது.
  • தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்து பார்வையிட்டார்.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் பழனிசாமியுடனும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடனும் தொடர்பு கொண்டு தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
  • புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வட்டாரமாக கடலூர் திகழ்கிறது.
  • தமிழகத்தில் பேருந்து பயணங்களும் மெட்ரோ இரயில் சேவைகளும் மீண்டும்  வழக்க நிலைக்கு திரும்பியுள்ளன.
  • புயல் பாதிப்பால் இதுவரையில் தமிழகத்தில் 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.