வாஷிங்டன்: அண்மையில், கொவிட்-19 தடுப்பு மருந்துகள் 90 விழுக்காடு வரை செயல்படுகின்றன எனும் தகவல்கள் வெளியாகின. பைசர், மாடெர்னா போன்ற சில நிறுவனங்கள் இறுதிகட்டத்தையும் எட்டி வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தன.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தொற்றுக்கு தடுப்பு மருந்து உருவாக்கியுள்ளனர். அம்மருந்தின் உற்பத்தியில் தவறுகள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.
இதில், ஒரு தடவை மருந்து செலுத்தப்பட்டவர்கள் இரண்டு முறை செலுத்தப்படவர்களை காட்டிலும் பாதுகாப்பாக இருப்பதாக முடிவுகள் கூறுகின்றன.
ஒரு முறை மருந்தைப் பெற்றவர்களுக்கு 90 விழுக்காடு செயல்படுகிறது. இரண்டு முறை பெற்றவர்களுக்கு 62 விழுக்காடு மட்டுமே செயல்படுகிறது.
ஆகவே, தடுப்பு மருந்தின் செயல்பாடு 70 விழுகாடு மட்டுமே என்று கூறப்படுகிறது.