இரண்டு இடைத்தேர்தல்களின் விவரங்களை அறிவிக்கும் போது தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கானி சல்லே, ஜனவரி 4- ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாளாகவும், ஜனவரி 12-ஆம் தேதி ஆரம்பக்கட்ட வாக்களிப்புக்கான தேதியாகவும் அறிவித்தார்.
கடந்த நவம்பர் 16 அன்று கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் காலமானார். தேசிய வீடமைப்புக் கழகத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையில், புகாயா சட்டமன்ற உறுப்பினர் மானிஸ் முகா முகமட் டாரா நவம்பர் 17 அன்று கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
65 வயதான சட்டமன்ற உறுப்பினர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பயனளிக்காது காலமானார்.