Home One Line P2 போலி கொவிட்19 தடுப்பு மருந்து அபாயம்- இண்டர்போல் எச்சரிக்கை!

போலி கொவிட்19 தடுப்பு மருந்து அபாயம்- இண்டர்போல் எச்சரிக்கை!

576
0
SHARE
Ad

வாஷிங்டன்: போலியான கொவிட்-19 தடுப்பு மருந்துகளை விற்கும் முயற்சியில் குற்றவியல் கும்பல்கள் ஈடுபட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலக நாடுகளுக்கு இன்டர்போல் கடிதம் அனுப்பி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொவிட்-19 தடுப்பு மருந்து 90 விழுகாடு திறனுடன் இருப்பதாகவும், ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து 92 விழுக்காடு திறனுடன் இருப்பதாகவும், அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து 100 விழுக்காடு வெற்றிகரமாக செயல்படுவதாக அறிவிக்கப்படுள்ள நிலையில் இந்த அச்சுறுத்தல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனில் பைசரின் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள இன்டர்போல், நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ, போலியான தடுப்பு மருந்து கும்பல்கள் விற்கலாம் என கூறியுள்ளது.