ஈப்போ: பேராக்கில் அம்னோ உறுப்பினர்கள் மந்திரி பெசார் பதவிக்கு இரண்டு வேட்பாளர்களை முன்மொழிவதாகக் கூறப்படுகிறது. ஒருவர் புதியவர், மற்றொருவர் அனுபவசாளி என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யா மற்றும் பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சரணி முகமட் ஆவர்.
பெர்சாத்து துணைத் தலைவரான மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு இன்று மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இழந்ததை அடுத்து, இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. பைசால் தனது பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இரண்டு குழுக்கள் உள்ளன, ஒன்று ஷாருலுக்கும், மற்றொன்று சரணிக்கும் பரிந்துரைக்கிறது,” என்று வட்டாரம் எப்எம்டியிடம் கூறியது.
ஷாருல் தற்போது ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளார். ஷாருல் அம்னோவின் புதிய தோற்றத்தையும் சிந்தனையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காணப்படுகிறது.
“அவர் ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். அனைவருடனும் எவ்வாறு இணைய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். எல்லோரிடமும் ஒரு நல்லுறவை எவ்வாறு வைத்திருப்பது என்பது அவருக்குத் தெரியும், ” என்று வட்டாரம் கூறியது. பேராக்கில் உள்ள சீனர்களும், இந்தியர்களும் அவரை விரும்புகிறார்கள்.