Home One Line P1 பேராக்: புதிய மாநில அரசாங்கத்தில் பாஸ் இடம்பெறாது

பேராக்: புதிய மாநில அரசாங்கத்தில் பாஸ் இடம்பெறாது

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய பேராக் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் இணையப்போவதில்லை என பாஸ் முடிவு செய்துள்ளது.

பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமுவை, இன்று பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, இது மத்திய தலைமையின் முடிவு என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

“பாஸ் மத்திய குழுவின் நிலைப்பாட்டின் முடிவுக்கு ஏற்ப மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசாருக்கு ஆதரவளித்தனர். அந்த முடிவுக்கு ஏற்ப, புதிய பேராக் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் இணைய வேண்டாம் என்று மத்திய பாஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இருப்பினும், சமூகத்திலும், மாநிலத்திலும், தேசிய மட்டத்திலும் வழக்கம் போல் பாஸ் தனது பங்கைத் தொடரும்,” என்று தக்கியுடின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பாஸ் பெர்சாத்து தலைமையிலான தேசிய கூட்டணியில் உறுப்பினராக உள்ளது. இருப்பினும், இது முவாபாகாட் நேஷனலில் அம்னோவுடன் தொடர்பில் உள்ளது.