Home One Line P1 டிசம்பர் 7 முதல் காவல் துறை அனுமதியின்றி மாநிலம் கடக்கலாம்

டிசம்பர் 7 முதல் காவல் துறை அனுமதியின்றி மாநிலம் கடக்கலாம்

632
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 7) தொடங்கி நாடு முழுவதிலும், காவல் துறை அனுமதியின்றி மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

காவல் துறையினரின் அனுமதியின்றி மக்கள் மாநிலம் கடந்து பயணம் செய்யலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று சனிக்கிழமை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாநில எல்லைகளிலும், சாலைச் சுங்கச்சாவடிகளிலும் சாலைத்தடுப்பு பரிசோதனைகளை காவல் துறையினர் நடத்த மாட்டார்கள்.

எனினும், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில், இன்னும் மாநிலம் கடந்து பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் இஸ்மாயில் சப்ரி மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நடமாட்டக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) பின்பற்றப்படும் வழக்கமான பணிகளில் இனி காவல் துறையினர் கவனம் செலுத்துவார்கள். இதன் தொடர்பான வழக்கமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், பினாங்கு, பேரா (தேஜா, சங்காட் ஜொங்- தவிர்த்து), கிளாந்தான் (கோத்தா பாரு, மாச்சாங், தானா மேரா, பாசிர் மாஸ் – தவிர்த்து), புத்ராஜெயா, லாபுவான் நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட் டிக்சன் – தவிர்த்து) உள்ளிட்ட மாநிலங்களில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (PKPB) டிசம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.

மேலும், சிலாங்கூர் (சபா பெர்னாம், உலுசிலாங்கூர், கோலசிலாங்கூர் – தவிர்த்து), கோலாலம்பூர், சபா, ஜோகூரில் உள்ள ஜோகூர் பாரு, பத்து பாஹாட் & கூலாயில் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (PKPB) நீட்டிக்கப்படுகிறது.