Home One Line P1 பைசால் அசுமு பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்

பைசால் அசுமு பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்

686
0
SHARE
Ad

ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, தனது அதிகாரபூர்வ பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

அதைத் தொடர்ந்து தனது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து இன்று சனிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களையும் அவர் சந்தித்தார்.

பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை பிற்பகல் 3.00 மணியளவில் சந்தித்த பின்னர் அவரிடம் அசுமு தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அவரது ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் முறையே தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.

#TamilSchoolmychoice

தன்னால் இயன்ற அளவுக்கு மந்திரி பெசார் பொறுப்பைத் தான் வகித்துத் தனது கடமைகளை ஆற்றியதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட அசுமு, “நானும் மனிதன்தான்! தவறுகள் இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என நெகிழ்ந்த குரலில் தெரிவித்தார்.

இருப்பினும் பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் “மீண்டும் நாம் சந்திப்போம். ஒருவேளை அடுத்த நாம் துணைப் பிரதமர் இல்லத்தில் சந்திக்கலாம்” என்ற மர்மமான வாசகத்தை அவர் உதிர்த்தார்.