Home One Line P1 கெடா மந்திரி பெசாரை ஒற்றுமைத் துறை அமைச்சர் கண்டிக்க வேண்டும் – பொன்.வேதமூர்த்தி

கெடா மந்திரி பெசாரை ஒற்றுமைத் துறை அமைச்சர் கண்டிக்க வேண்டும் – பொன்.வேதமூர்த்தி

593
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தலைவர்களையும் ஜசெக தலைவர்களையும் இன ரீதியாக விமர்சிக்கும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோருக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாடிக் ஆலோசனை வழங்குவதுடன் அவரை கண்டிக்கவும் வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

“பல இன, பல கலாச்சாரத் தன்மை கொண்ட மலேசிய கூட்டு சமுதாயத்திற்கு இன அடிப்படைவாத கருத்தும் நடைமுறையும் பொருத்தமில்லாதவை. கெடா மாநிலத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உடைப்பு சம்பந்தமாக மஇகா, ஜசெக தலைவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவரும் முகமட் சனுசி, இந்தியர்களை இன அடிப்படையில் விமர்சிப்பதுடன் மதுவையும் கள்ளையும் தொடர்புப் படுத்தி உணர்ச்சி ரீதியாக கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்துக்களின் சமய சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் தவறிவிட்ட கெடா மந்திரி பெசார், ஆலயங்களுக்கான நிலத்தை வழங்காமலும் அல்லது மாற்று ஏற்பாட்டை செய்யாமலும் புறக்கணித்து விட்டார். இதை மறைப்பதற்காக வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்தியத் தலைவர்களை முகமட் சனூசி தொடர்ந்து இன அடிப்படையில் விமர்சிக்கிறார்” என்று மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி)  தலைவருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.