Home நாடு தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் விடுமுறை – மந்திரி பெசார் சனுசி அறிவிப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் விடுமுறை – மந்திரி பெசார் சனுசி அறிவிப்பு

402
0
SHARE
Ad
முகமட் சனுசி முகமட் நோர்

அலோர்ஸ்டார் : தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதியை பொது  விடுமுறையாக கெடா அரசு அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை (டிச. 3) நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.

“கடந்த ஆண்டு, நாங்கள் விடுமுறை அளித்தோம், இந்த ஆண்டும் நாங்கள் அதையே செய்துள்ளோம். அதை முன்கூட்டியே அறிவித்தோம். இந்த மாநிலத்தில் உள்ள இந்துக்கள் தங்கள் விடுமுறையை அனுபவிக்கலாம், மற்றவர்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

தைப்பூசம், பேராக், பினாங்கு, கோலாலம்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது விடுமுறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டுக்கான தைப்பூசம் வியாழக்கிழை ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.