புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான விசாரணை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேலும் நான்கு நபர்களை புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை (ஜன. 4) வரவழைத்தது.
நால்வர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராஜேஷ் நாகராஜன் மற்றும் சச்ப்ரீத்ராஜ் சோஹன்பால், எம்ஏசிசி சட்டத்தின் 30வது பிரிவின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்ய நால்வரும் அழைக்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்த நால்வரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைத்த அதே வேளையில், அவர்களைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.
“எம்ஏசிசி எங்கள் வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவதற்கும், ஆலோசனை வழங்குவதிலிருந்தும் எங்களைத் தடுத்தது. அமலாக்க அமைப்புகளால் விசாரிக்கப்படும்போது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்கான உரிமை எங்கள் குற்றவியல் நீதி அமைப்புக்கு அடிப்படையானது,” என்றும் அவர் தெரிவித்தார்.
தன் மீதான ஊழல் விசாரணை பழிவாங்கும் நடவடிக்கை என டாயிம் குறை கூறியிருந்தார்.
டிசம்பர் 30-ஆம் தேதித வெளியிட்ட ஓர் அறிக்கையில், தற்போதுள்ள சட்டம் மற்றும் பண்டோரா ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் டாயிம் மீதான விசாரணை நடத்தப்படுகிறது என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
d