Home One Line P1 பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுபட நிலையான அரசு தேவை

பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுபட நிலையான அரசு தேவை

352
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் நாட்டின் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்ல வித்திட்டது. மேலும், நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மட்டத்திலும் உள்ளது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.

“மலேசியா, 2020-ஆம் ஆண்டில், முதலீட்டுச் சூழலை தகர்த்திய பல்வேறு அரசியல் நாடகங்களைக் கண்டது. கொவிட்-19 தொற்றுநோய் மலேசிய பொருளாதாரத்தை வரலாற்றில் மிக மோசமான மந்தநிலையில் இருக்கச் செய்துள்ளது. இப்போதிலிருந்து மூன்று வாரங்கள், 2021- ஆம் ஆண்டின் விடியலாக இருக்கும். முன்னேற்றம் மற்றும் போட்டித்திறனுக்கான ஒரு புதிய பாய்ச்சல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவுமில்லாமல் 2020- ஆம் ஆண்டை முடிப்போம். இந்தோனிசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து பொருளாதார போட்டியில் முன்னேறுகின்றன. தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கின்றன மற்றும் முக்கியமான தொழில்மயமான நாடுகளாகின்றன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2020- ஆம் ஆண்டில் நாடு நிறைய நேரத்தையும் வாய்ப்பையும் வீணடித்தது. எனவே நாடு உடனடியாக ஒரு தைரியமான, நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார திட்டத்துடன் மீட்கத் தொடங்க வேண்டும் என்று முகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

பொருளாதார மீட்டமைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் தரமான முதலீடு மற்றும் திறந்த சந்தைகள் தீவிரமாக மாற வேண்டும் என்று அவர் கூறினார்.

“எனவே, மலேசியா உடனடியாக ஓர் நிலையான அரசாங்கம், முற்போக்கான அமைச்சரவையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், புரட்சிகர பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.